#BIG BREAKING :தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் இனி ரேஷன் பொருட்கள் வாங்கலாம்

#BIG BREAKING :தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் இனி ரேஷன் பொருட்கள் வாங்கலாம்

  • தமிழகத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்லாம் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
  • முதற்கட்டமாக தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தின்படி எந்த மாநிலத்திலும் எந்த ரேசன் கடைகளிலும் பொருட்களை வாங்கி கொள்ள முடியும் என்று அறிவித்தார். இதனை நாடு முழுவதும் இத்திட்டதை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய நுகர்வோர் நலன் மற்றும் உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் அனைத்து மாநிலங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு 2020-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதிக்குள் நாடு முழுவதும் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கடந்த மாதம் 3-ம் தேதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் கடந்த 1-ம் தேதி முதல் 12 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா, சத்தீஷ்கர் ஆகிய 4 மாநிலங்களில் சில பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுகிறது. இதனை நாடு முழுவதும் ஜூன் 1-ம் தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். ஒரே குடும்ப அட்டை திட்டம் மின்னணு முறையில் செயல்படும் நியாயவிலை கடைகளில் அமல்படுத்தப்படும்.மேலும்  இத்திட்டம் தமிழ்நாட்டிலும் அமல்படுத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த திட்டம் மூலம் கூடுதல் பயனாளிகள் பயன் பெறுவார்கள், என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த வகையில், தமிழக அரசு தற்போது குடும்ப அட்டைதாரர்கள் தமிழகத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்லாம் என அரசாணையை ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மட்டும் முதற்கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில் உள் மாநில பெயர்வுதிறன் (Intra state portability) என்ற திட்டம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அரசாணையில் தமிழக அரசு  தெரிவித்துள்ளது. எனவே, தங்கள் மண்டலத்தில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பான, தங்களின் அறிக்கையினை வாரத்தோறும் பதிவாளருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தமிழக அரசு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube