இன்றைய (19.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

இன்றைய (19.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

மேஷம் :பணத்தேவை பூர்த்தியாகும் நாள். பக்குவமான பேச்சால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். மாமன் -மச்சான் வழியில் ஏற்பட்டிருந்த மனக்கசப்பு அகலும் குலதெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்துங்கள் நினைத்தவை நிறைவேறும்.

ரிஷபம் : அஞ்சல் வழியில்  ஆச்சரியப்பட வைக்கும் செய்தி கிடைக்கும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். எதிர்பார்த்தபடி ஆதாயம் வந்து சேரும். நண்பர்கள் உங்களுக்காக போட்டி போட்டுக் கொண்டு உதவ முன்வருவார்கள்.

மிதுனம் : நீங்கள் எதிர்பார்த்து காத்தருந்த அரசு வழி சலுகைகள் கிடைக்கும் நாள். பெண் பிள்ளைளால் பிரச்சினை தீரும். உத்தியோக மாற்றம் மற்றும் வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

கடகம் : இன்று மனதால் மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். பாதியில் நின்ற விட்டதே என்று எண்ணிய பணி மீண்டும் தொடரும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை வெளிப்படும். கூட்டுத்தொழில் வெற்றித் தேடி தரும். வங்கிகளில் சேமிப்பானது உயரும்.

சிம்மம் : தொலைத்தூரத்தில் இருந்து நல்ல தகவல் வந்து சேருகின்ற நாள்.சுகங்களும், சந்தோ‌ஷங்களும் உள்ளத்தில் அதிகரிக்கும். வெளியூர்களுக்கு தொழில் ரீதியாக பயணம் மேற்கொள் வீர்கள். பணியாளர் தொல்லைகள் அகன்று புத்துணர்வு கிடைக்கும்.

கன்னி : இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதுகின்ற நாள். நீங்கள் எதாவது போட்டி, பந்தயங்களில் பங்கேற்றால் அதில் வெற்றி கிடைக் கும். பிள்ளைகள் வழியில் நல்லச் செய்தி வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான பொருட் களை வாங்கி மகிழுவீர்கள்.

துலாம் : முன்னேற்றப் பாதையை நோக்கி மும்முரமாக அடியெடுத்து வைக்கும் நாள். இன்று பணம் பல வழிகளில் வந்து  உங்களது பையை நிரப்பும். ஆற்றல் மிக்கவர்களின் ஆதரவு இன்று கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பர்.

விருச்சிகம் : நேற்றைய பிரச்சணை இன்று நல்ல முடிவிற்கு வரும்.மதியத்திற்கு மேல் மனக்குழப்பங்கள் அகலும். உங்கள் குணமறிந்து குடும்பத்தினர் நடந்து கொள்வர். வாங்கல் மற்றும் கொடுக்கல்கள் திருப்தி தரும்.

தனுசு : உங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருந்தவர்களை இன்று சந்தித்து மகிழும் வாய்ப்பு கிடைக்கும் நாள்.வரவு மற்றும் செலவு சமமாகும். வாகனமாற்றம் செய்யலாமா என சிந்தித்து கொண்டே இருப்பீர்கள். தொழில் பங்குதாரர்களிடம் சற்று விழிப்புணர்ச்சி தேவை.

மகரம் : இன்று எடுக்கும் காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும் அற்புதமான நாள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம்  வந்து சேரும்.அரசியல்வாதிகளால் இன்று அனுகூலம் உண்டு.

கும்பம் : அடுத்தவர்காக  காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும் நாள். சுபச்செய்திகள் இல்லம் வந்து சேரும் நாள்.கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். குடும்பச்சுமையானது கூடும். உத்தியோகத்தில்  கூடுதல் பொறுப்புகள் உங்களை நாடி வரும்.

மீனம் : தொலைதூரத்திலிருந்து இன்று நல்ல தகவல் வந்து சேரும் நாள். தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமைக்கு கெடுவிளைவித்து வந்தவர்கள் தானாக விலகுவார்கள். வருங்கால நலன்கருதி புதிய திட்டங்கள்  தீட்டுவீர்கள் மகிழ்வீர்கள்.

author avatar
kavitha
Join our channel google news Youtube