இன்றைய (16.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

இன்றைய (16.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

மேஷம் : வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். நிதானத்தோடு செயல்படுவீர்கள்.  உறவினர் வழியில் தொல்லை ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கலாம். கொடுக்கல்–வாங்கல்களில் கவனம் தேவை.

ரிஷபம் :தெளிவு பிறக்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும்.வரவு திருப்தி தரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். அடுத்தவர் நலனில் எடுத்த அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும்.

மிதுனம் :குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்படும். உறவினர்களால் பலன் கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.மனநிம்மதி அடையும்.

கடகம் : உள்ளத்தில் உற்சாகம் ஏற்படும் நாள். விரதம், வழிபாடு  போன்றவைகளில் நம்பிக்கை கூடும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகள் உள்ளம் மகிழ உதவுவர். பயணத்தால் பலன் கிடைக்கும்.

சிம்மம் : அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும் நாள். தொழில் முன்னேற்றம் காரணமாக முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.தனவரவு திருப்தி தரும்.விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி : வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகி மகிழும் நாள். கொடுக்கல் மற்றும் வாங்கல் ஒழுங்காகும். பயணம் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.னேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வீடு,வாங்கும் யோகம் கைகூடும்.

துலாம் : பணியில் ஏற்பட்டு வந்த தடை அகலும் நாள். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ளுவீர்கள்.மாற்று இனத்தவர்களால் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். பயணத்தால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம் : பாராட்டு மற்றும் புகழ் பன்மடங்கு கூடும் நாள். பாதியில் நின்ற பணியானது மீண்டும் தொடரும். பொருளாதார நிலையானது உயரும். நல்ல தகவலை நண்பர்கள் கொண்டு வந்து சேர்ப்பர். பிரபலங்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியில் உதவி கிடைக்கும்.

தனுசு : சொன்ன சொல்லை காப்பற்றி மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.புதிய பொறுப்புகள் வந்து சேரும். நெடுத்தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்க வழிபிறக்கும்.சொத்துகள் வாங்க ,விற்க எடுத்த முயற்சியானது வெற்றி பெறும்.

மகரம் : வழிபாடுகளில் சிந்தனையைச் செலுத்தி மகிழும் நாள்.வருமானம் இரட்டிப்பாகும்.  பூர்வீகச் சொத்துகளில் லாபம் கிடைக்கும். மறதியின் காரணமாக பாதியில் நின்ற பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள்.

கும்பம் : வேண்டாம் என்று விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணையும் நாள். அக்கம்பக்கத்தினரிடம் அளவாகப் பழகுவது நல்லது.நெருங்கிய நண்பர் ஒருவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும் ஆனால் செலவுகளும் கவலையை ஏற்படுத்தும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.

மீனம் : நினைத்த காரியம் நினைத்தவாறே  நடைபெறும் நாள். நாடு மாற்றச் சிந்தனையானது மேலொங்கும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும்.  நாசுக்காகப் பேசி பாக்கிகளை வசுலிப்பீர்கள்.ஆரோக்கியம் சீராகி மனம் உற்சாகமடையும்.

author avatar
kavitha
Join our channel google news Youtube