இன்றைய (14.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று கொஞ்சம் கடினமான நாள். உங்கள் பொறுமையை இழக்கும் சூழல் உருவாகலாம். உங்கள் செயல்முறையில் அமைதியும் உறுதியும் அவசியம்.
ரிஷபம் : உங்கள் செயல்களை பொறுமையாக செய்யுங்கள் தாமதம் நேரலாம் இருந்தாலும் பொறுமையாகவே செய்யுங்கள் அதுவே உங்களுக்கு நல்லது.
மிதுனம் : நல்லது கெட்டது என இரண்டும் கலந்து கிடைக்கும் நாள். பொறுமை மிகவும் அவசியம்.
கடகம் : இன்று மிகவும் ஆர்வமாக செயல்படுவீர்கள். அதனால் செய்த காரியங்கள் மிகவும் சீக்கிரமாக முடிந்துவிடும்.  உங்கள் நலனுக்கான அடுத்த நடவடிக்கையும் எடுப்பீர்கள்.
சிம்மம் : இன்று அதிர்ஷ்டமான நாள்.  உங்கள் முயற்சிகளில் வெற்றிகள் கிட்டும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
கன்னி :கடவுளை வணங்குங்கள் கோவிலுக்கு செல்லுங்கள் உங்கள் மனம் மகிழ்ச்சியடையும். முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
துலாம் : எதையோ இழந்த சோகம் இன்று இருக்கும். நேர்மறையான எண்ணங்களுடன் செயல்படுங்கள். கடவுளை வணங்குங்கள் அது உங்களை மிகவும் மன  நிம்மதியுடன் இருக்க வைக்கும்.
விருச்சிகம் : இன்று ஏற்ற இறக்கம் இல்லாத நாள். ஆதலால் அதீத முயற்சி எதுவும் செய்ய வேண்டாம். இன்று உங்கள் இலக்குகளை இலகுவாக வையுங்கள்.
தனுசு : இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக அமையும். உங்கள் திறமை உங்கள் மனம் கவர்ந்தவர்ளுக்கு பிடித்துப்போகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.
மகரம் : எதோ இழந்தது போல இருக்கும். அதனை மறந்து நேர்மறையான எண்ணங்களுடன் இன்றைய நாளை அணுகுங்கள்.
கும்பம் : எதிர்மறையான எண்ண ஓட்டங்கள் மனதில் எழும். அதனை தவிர்த்துவிடுவது நல்லது. முடிந்த வரை நேர்மறையான எண்ணங்களை மனதில் வளர்த்துக்கொள்ளுங்கள்.
மீனம் : இன்று நாள் துடிப்பாக இருக்கும் . வெற்றிக்கான முயற்சிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். செய்யும் செயல் திடமுடன் செய்து முடிப்பீர்கள்.
 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.