ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் நிர்வாகி ஒருவர், விழாவில் நடனமாடிய பெண்ணின் மீது பணத்தை அள்ளி இறைக்கும் காட்சி! !

விழாவில் நடனமாடிய பெண்ணின் மீது பீகார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் நிர்வாகி

By Fahad | Published: Apr 06 2020 08:53 PM

விழாவில் நடனமாடிய பெண்ணின் மீது பீகார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் நிர்வாகி ஒருவர், பணத்தை அள்ளி இறைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. பீகார் மாநிலம் கயாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிர்வாகி அருன் தாத்புரி என்பவர், விழாவில் நடனமாடிய பெண்ணின் அருகில் சென்றார். பெண்ணுடன் சேர்ந்து நடனமாடிய அவர் கையில் கத்தை கத்தையாக வைத்திருந்த பணத்தை, அந்த பெண் மீது வீசினார். ஒரு கட்டத்தில் தவறாக நடக்க முயன்ற அவரை, அங்கிருந்தவர்கள் எச்சரித்து கீழே இறக்கினர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள். https://youtu.be/JYeICC2rf3o