“ரேப் இன் இந்தியா” விவகாரம்.! அமளியால் இரு அவையும் ஒத்திவைப்பு .!

  • ராகுல் காந்தி ஜார்க்கண்ட் பொதுக்கூட்டத்தில் “ரேப் இன் இந்தியா” என பேசி இருந்தார்.
  • இதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.பிக்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

கடந்த நவம்பர் மாதம் 18 -ம் தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் குடியுரிமை மசோதா, எஸ்.பி.ஜி பாதுகாப்பு மசோதா போன்ற பல்வேறு மசோதாக்கள் நிறைவேறியது.

குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ராகுல் காந்தி ஜார்க்கண்ட் பொதுக்கூட்டத்தில் “ரேப் இன் இந்தியா” என பேசி இருந்தார். ராகுல் காந்தி பேசியதற்கு  மன்னிப்பு கேட்க வேண்டும் என  பாஜக எம்.பிக்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எங்களுக்கு நீதி வேண்டும் என கோஷம் இட்டனர்.மேலும் ராகுல்காந்தி பதிலளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் இன்று கடைசி நாள் அவை கூடியதில் இருந்து அமளி ஏற்பட்டதால் மக்களவையையும் , மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர்கள் அறிவித்தனர்.

author avatar
murugan