மெர்சல், பிகில் பட இசைவெளியீட்டை தொகுத்து வழங்கியவருக்கு அடித்த ஜேக்பாட்! தளபதி 64 சூப்பர் அப்டேட்!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படத்தை கைதி  பட இயக்குனர்

By manikandan | Published: Nov 09, 2019 02:09 PM

தளபதி விஜய் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படத்தை கைதி  பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். சேவியர் பிரிட்டோ என்பவர் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரியதாக எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது. காரணம் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், என பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தில் யு டியூபில் இருந்தும், சின்ன திரையில் இருந்தும் புதியதாக நடிக்க உள்ளனர். அதில் யு டியூபில் கலக்கிய பவி டீச்சர் இதில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும் மெர்சல், பிகில் உள்ளிட்ட பட இசைவெளியீட்டு விழா தொகுப்பாளினி ரம்யா இதில் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்க்கு முன்னர் ரம்யா  ஓகே கண்மணி, ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc