எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது.! மத்திய அமைச்சர் தமிழில் ட்வீட்.!

மத்திய அரசு எந்த ஒரு மாநிலத்திலும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை

By manikandan | Published: Aug 02, 2020 02:50 PM

மத்திய அரசு எந்த ஒரு மாநிலத்திலும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.' என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தமிழில் ட்விட் செய்துள்ளார்.

மத்திய அரசானது அண்மையில் புதிய கல்வி கொள்கை 2020-ஐ அறிமுகப்படுத்தியது. அந்த கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்றிருந்தது. அதாவது, தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு விருப்ப மொழியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டது. மேலும், 3,5,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைமுறையையும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பல்வேறு கருத்துக்களால் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் பலரும் எதிர்த்து கருத்து கூறி வந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து தமிழில் பதிவிட்டுள்ளார்.

அவர் தமிழக பாஜக முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பதிவிட்டிருந்த டீவீட்டிற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த தங்கள் (பொன் ராதாகிருஷ்ணன்) வழிகாட்டுதலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு எந்த ஒரு மாநிலத்திலும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.' என தமிழில் ட்விட் செய்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc