மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் சகோதரர் ராமசந்திர பாஸ்வான் காலமானார்!

நாடாளுமன்ற மக்களவையின் உறுப்பினரும் , மத்திய உணவு மற்றும் பாதுகாப்பு துறை

By dinesh | Published: Jul 21, 2019 06:31 PM

நாடாளுமன்ற மக்களவையின் உறுப்பினரும் , மத்திய உணவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் சகோதரருமான ராம் சந்திர பாஸ்வான் மாரடைப்பால்  காலமானார். 56 வயதான ராம் சந்திர பாஸ்வான் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீரென மாரடைப்பு  ஏற்பட்டு அவரது உயிர் இன்று பிரிந்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி சார்பாக பீகார் மாநிலம் சமஸ்திபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 4 முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc