குர்மித் ராம் ரஹீம் சிங்கிற்கு விவசாயம் செய்வதற்காக 42 நாட்கள் பரோல்

சிறையில் உள்ள குர்மித் ராம் ரஹீம் சிங்கிற்கு விவசாயம் செய்வதற்காக 42 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
பலாத்கார வழக்கில் தேரா சச்ச சவுதா அமைப்பின் நிறுவனரான ராம் ரஹீம் சிங் குற்றவாளி என ஹரியானாவின் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. பலாத்கார வழக்கில் தேரா சச்ச சவுதா அமைப்பின் நிறுவனரான ராம் ரஹீம் சிங் குற்றவாளி என ஹரியானாவின் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. மேலும் பத்திரிக்கையாளர் கொலை வழக்கிலும் சுனோரியா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில் சிறையில் உள்ள குர்மித் ராம் ரஹீம் சிங் விவசாயம்  செய்வதற்காக  தனக்கு பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து சிர்சா மாவட்ட நிர்வாகத்திற்கு சிறை கண்காணிப்பாளர் எழுதியுள்ள கடிதத்தில் சிறையில் குர்மித்தின் நடவடிக்கைகள் திருப்தியாக இருப்பதாக  கூறினார்.பின்னர் குர்மித் ராம் ரஹீம் சிங்   விவசாயம் செய்வதற்காக 42 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.