வெளியான மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் !பாஜக ,காங்கிரஸ் வெற்றி நிலவரம் என்ன ?

இந்தியா முழுவதும் 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி மார்ச் மாதம் 10 மாநிலங்களில் 36 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மீதமுள்ள 19 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் இன்று நடைபெறுகிறது.குஜராத் மற்றும் ஆந்திராவிலிருந்து  தலா 4 இடங்கள்,ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்திலிருந்து  தலா 3 இடங்கள்,ஜார்கண்டிலிருந்து 2 இடங்களும், மணிப்பூர் ,மிசோரம் மற்றும் மேகாலயாவிலிருந்து தலா ஒரு இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

அதன்படி தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் ராஜஸ்தானில் காங்கிரஸ் 2 இடங்கள் ,பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.  ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது .மத்திய பிரதேசத்தில் பாஜக 2 இடங்களிலும் ,காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.