ஆணு ஆயுத கொள்கை எப்போது வேண்டுமானாலும் மாறலாம்! – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்துரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் ஜம்மு மற்றும் லாடக்கை தலைநகராக கொண்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை அடுத்து, பாகிஸ்தான் மற்றும் சீனா என இருநாடுகளும் இதற்க்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அதற்கான நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ இந்தியா தனது அணு ஆயுத கொள்கையை எப்போது வேண்டுமானாலும் சூழ்நிலைக்கேற்ப மாற்றிகொள்ளும்’ என தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அணு ஆயுத கொள்கையின் படி, இந்தியா மீது முதல் தாக்குதல் நடத்தப்பட்டால் மட்டுமே, இந்தியா தங்களது அணு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் என்பதுதான். இதனை பல்வேறு சர்வதேச மாநாடுகளில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஆனால் தற்போது மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இவ்வாறு கருத்து கூறியிருப்பது, பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு மறைமுக எச்சரிக்கையா என சிலாகித்து வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.