முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கு : ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கு : ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை உயர்நீதிமன்றம் நளினி தொடர்ந்த வழக்கை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் ராஜீவ் காந்தி வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில்,  தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய ஆயுள் கைதிகள் உரிமை கோர முடியாது.
ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் முழுக்க சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு அளித்த பரிந்துரை ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது என்று தகவல் தெரிவித்தது .இதன் பின் வழக்கை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
Join our channel google news Youtube