வரலாற்றில் இன்று(21.05.2020)… முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று…

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் தற்கொலைப்படை தாக்குதலால் குண்டு வைத்து கொல்லப்பட்ட தினம் வரலாற்றில் இன்று.

இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் அதிகாரமிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தும் அரசியல் மீது ஆர்வமில்லாமல், விமான ஓட்டியாக  தனது வாழ்வை நிகழ்த்திய  ராஜீவ் காந்தி  தன் தம்பியான சஞ்சய் காந்தி இறந்த பின், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி இந்திய அரசியலுக்கு வந்தார். 1981 பிப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப்பிரதேசத்திலுள்ள அமேதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இலங்கையில் நடைபெற்று வந்த உள்நாட்டு போரில் சிங்களர்கள் மற்றும் விடுதலை புலிகளுக்கிடையேயான போர் நிறுத்தத்திற்காக இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையைப் பெற்றுத் தர முயன்றார். ஆனால்,  1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி, இதே நாளில் ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டுமூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

ராஜீவ் படுகொலை: 'உங்களையும் ...

ராஜீவ் காந்தியின் படுகொலை விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது என்பது தெரியவந்தது.  பின்னர், அவரது உண்மையான பெயர் காயத்ரி என்று கண்டறியப்பட்டது.  அந்த நிகழ்வானது, அன்று  காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் மாலை அணுவித்தனர். சரியாக 22:21 மணிக்கு கொலையாளி தானு, அவரை அணுகி வாழ்த்தினாள். அவள் அவரது கால்களை தொட கீழே குனியும்போது அவளது ஆடையின் அடியே வைத்திருந்த ஆர் டி எக்ஸ் வெடிபொருளை வெடிக்கச் செய்தாள். இதில், ராஜீவ் காந்தி மற்றும்  அவருடன் 14 பேரும்  அந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர்.

ராஜீவ் படுகொலை மர்மம்: சாட்சி ...

இச்சம்பவம் அங்கிருந்த ஒரு புகைப்படக்காரரின் புகைப்பட கருவியில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் தற்கொலைப்படை தாக்குதலால் குண்டு வைத்து கொல்லப்பட்ட தினம் வரலாற்றில் இன்று.

author avatar
Kaliraj