ரஜினி நீதிமன்றத்தில் பதில் சொல்லும் காலம் வரும்- கி.வீரமணி எச்சரிக்கை

  • பெரியார் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 
  • நீதிமன்றத்தில் ரஜினி  பதில் சொல்லும் காலம் விரைவில் வரும் என்று  கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், பெரியார் தலைமையில் ராமர், சீதை அவர்களின் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்பட்டது . மேலும் அந்த உருவங்களுக்கு செருப்பு மாலை போடப்பட்டது என்று  பேசினார்.ரஜினி பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதாமாக நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ்கார்டன் இல்லத்தில் வெளியே செய்தியாளர்களை சந்தித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில் ,துக்ளக் விழாவில் நான் கற்பனையாக எதுவும் பேசவில்லை.1971-ல் பெரியார் நடத்திய பேரணி குறித்தும், செருப்பு வீச்சு குறித்தும் கற்பனையாக நான் எதையும் கூறவில்லை.தன்னுடைய பேச்சுக்கு,மன்னிப்போ,வருத்தமோ தெரிவிக்க முடியாது திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகையில்,மன்னிப்பு கேட்பதும் வருத்தம் சொல்வதும் மனிதப்பண்புக்கு அடையாளம்.ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எப்படி நடப்பார் என்பதற்கு இதுவே முன்னோட்டம் ஆகும். ரஜினி நீதிமன்றத்தில் பதில் சொல்லும் காலம் விரைவில்  வரும் என்று  கி.வீரமணி தெரிவித்துள்ளார்.