பொங்கலுக்கு தர்பார் வெளியான பிறகு ரஜினியின் அரசியல் தர்பார் -தமிழருவி மணியன்.!

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் ஒரு தனியார் பள்ளியின்

By murugan | Published: Dec 15, 2019 02:54 PM

  • காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் ஒரு தனியார் பள்ளியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
  • அதில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் தர்பார் வெளியாகும்.அதன் பிறகு ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து உள்ள பெருமாநல்லூரில் ஒரு தனியார் பள்ளியின் நிகழ்ச்சியில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் தர்பார் வெளியாகும்.அதன் பிறகு ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும். அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற கேள்விக்கு இனி இடம் கிடையாது.அவர் அரசியலுக்கு வருகிறார்.ஒவ்வொரு கட்டத்திலும் முறையாக அவர் எல்லாவற்றையும்  அறிவிப்பார்.எந்த இடத்ததில் அரசியல் கட்சியை தொடங்குவது ,எந்த இடத்தில் மாநாடு நடத்துவது ,எப்போது மக்களை சந்திப்பது ,எந்த வடிவத்தில் தேர்தல் அறிக்கையை மக்களுக்கு வழங்குவது என தெளிவான சிந்தனைகளோடு ரஜினிகாந்த்  திட்டமிட்டு அனைத்தையும் உருவாக்கி உள்ளார். சரியான நேரத்தில் ஊடகங்களை அழைத்து ஒவ்வொன்றாக வெளிப்படுத்துவர் என தமிழருவி மணியன் கூறினார்.
Step2: Place in ads Display sections

unicc