ரஜினியின் கருத்து சோனியா, மன்மோகன் சிங் சிந்தனைக்கு நிகரானது - எம்.பி.மாணிக்கம் தாகூர்

விருதுநகரில் நடைபெற்ற விழிப்புணர்வு விழா ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி.

By balakaliyamoorthy | Published: Mar 14, 2020 03:17 PM

விருதுநகரில் நடைபெற்ற விழிப்புணர்வு விழா ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர், ஆட்சித் தலைமையில் உள்ளவர்கள் அறிஞர்களும், நேர்மையானவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் கட்சித் தலைமைக்கு அரசியல் அதிகாரங்களுக்கு ஆசைப்படாதவர்கள் வர வேண்டும் என்ற ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது என தெரிவித்தார். இதைத்தான் சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் செய்தனர் என குறிப்பிட்டார்.

மேலும், 10 ஆண்டுகாலம் இந்த வழியில் தான் மத்தியில் சிறப்பான ஆட்சி வழங்கப்பட்டது. சோனியா காந்தி, மன்மோகன் சிங்கின் சிந்தனைக்கு நிகரான சிந்தனையுடன் ரஜினி பேசியுள்ளார் என கூறினார். எங்களைப் பொருத்தவரை தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான அரசு வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டிய அரசு என்றும் இந்த அரசு கமிஷன் கரப்ஷனில் திளைக்கும் அரசு என்று விமர்சித்தார். இந்த ஆட்சியில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகிறார்கள். அதை அமைச்சரே செய்கிறார் என்றும் தெரிவித்தார். ஆனால் அவர் மகிழ்ச்சியுடன் சுற்றிவருகிறார் என குற்றம்சாட்டினார்.

Step2: Place in ads Display sections

unicc