கொரோனா வைரஸ் குறித்து ரஜினிகாந்தின் அறிவுரை!

கொரோனா வைரஸ் நோயானது, முதலில் சீனாவில் பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வைரஸானது, மற்ற நாடுகளிலும் பரவ துவங்கியுள்ளது. இதானால் ஒவ்வொரு நாட்டு அரசும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில் இந்த வைரஸ் நோய் இந்தியாவிலும் 250-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ள நிலையில், இதுகுறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பில், இந்தியா இரண்டாவது நிலையில் உள்ளது.அது மூன்றாவது நிலைக்கு போய் விட கூடாது. 

வெளியில், ஜனங்கள் நடமாடும் இடத்தில இருக்க கூடிய கொரோனா வைரஸானது, 12-14 மணி நேரங்கள் அது பரவாமல் இருந்தாலே, அது மூன்றாவது நிலைக்கு செல்வதை தடுத்து விடலாம். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாளை (மார்ச் 23) தேதி ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார். 

இதேமாதிரி, இத்தற்காலியில் அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பானது இரண்டாவது நிலையில் இருக்கும், அந்நாட்டு அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. ஆனால், அந்நாட்டு மக்கள் அதனை உதாசீனப்படுத்தியதால் தான், இன்று பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளது. 

இதேமாதிரி நம்முடைய இந்தியாவிலும் நடக்க கூடாது. எனவே அனைவரும் இந்த ஊரடங்கு உத்தரவுக்கு இணைந்து செயல்படுவோம். இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக, தங்கள் உயிரையே பணயம் வைத்து போராடும், மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும், பிரதமர் மோடி அவர்கள் கூறியவாறு, அன்று மாலை 5 மணியளவில் பாராட்டுகளை தெரிவிப்பதோடு, அவர்களது குடும்பம் நலமுடன் இருக்கவும் வேண்டிக் கொள்வோம்.’ என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.