பாஜக மாநில தலைவர் பதவியெல்லாம் ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்ளமாட்டார்-திருநாவுக்கரசர்

பாஜக மாநில தலைவர் பதவியெல்லாம் ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்ளமாட்டார்-திருநாவுக்கரசர்

பாஜக மாநில தலைவர் பதவியெல்லாம் ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது ப.சிதம்பரம் குறித்த அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு குறித்து கேள்விக்கு திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில்,திமுக அமைச்சர்களின் விமர்சனம் மத்திய பாஜக அரசை சந்தோஷப்படுத்ததான் .மேலும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

பாஜக மாநில தலைவர் பதவியெல்லாம் ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்ளமாட்டார்.பாஜக தேசிய தலைவர் பதவி கொடுத்தால் கூட ரஜினி அதை ஏற்றுக்கொள்வது சந்தேகமே என்று  திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube