உள்ளாட்சி தேர்தல் குறித்து ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை என்று  ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தமிழ்

By venu | Published: Nov 08, 2019 12:28 PM

உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை என்று  ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகர் ரஜினிகாந்த் தற்போது வரை சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருகிறார்.அதற்கு மிக முக்கிய காரணம் ரஜினியின் ரசிகர் பட்டாளம் ஆகும்.இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் என்று என்றால் மிகையாவது.அந்த வகையில் தான் ஆண்டுதோறும் ரஜினி தனது ரசிகர்களை தனது சொந்த மண்டமான ராகவேந்திரா மண்டபத்தில் சந்திப்பார். இதன் ஒரு சந்திப்பாக கடந்த 2017 -ஆம் ஆண்டு ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதாவது  தனிக்கட்சி ஆரம்பித்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார்.அவர் அறிவித்த முதலே அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது முதலே அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். அப்போது போர் வந்தால் பார்த்துக் கொள்வோம் என்று கூறி தன் ரசிகர்களை ஆரவாரமாக வைத்திருந்தார். இதன் மூலம் போர் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிய அவர் போர்க்களத்தில் நின்று கொண்டு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை மற்றும்  இடைத்தேர்தல் ஆகிய இரண்டிலும் ரஜினி போட்டியிடவில்லை.அவருக்கு பின்னால் கட்சி தொடங்குவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்து தேர்தலிலும் போட்டியிட்டு தனது வாக்கு வங்கியினை ஓரளவு தாக்கு பிடித்துள்ளார்.தற்போது தமிழக பாஜக தலைமை காலியாக உள்ள நிலையில் அந்த பதவியை ரஜினி ஏற்பார் என்று தகவல் வெளியாகி வந்தது.அதேவேளையில்  தான் ரஜினியின் புதுக்கட்சி பணிகள் வேகமெடுத்து வருகிறது என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் நடிகர் கமலின் அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின்பு,நடிங்கர்  ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,உள்ளாட்சி தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் போட்டியில்லை என்று  ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc