துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி.. முரசொலி வைத்திருந்தால் திமுகவினர்.. ரஜினிகாந்த் திடீர் கருத்து.. அதிரும் அரசியல் வட்டாரம்..

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று அதாவது ஜனவரி 14ல்,  சோவின் துக்ளக்

By kaliraj | Published: Jan 15, 2020 07:42 AM

  • சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று அதாவது ஜனவரி 14ல்,  சோவின் துக்ளக் இதழின் 50 ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது.
  • இந்த விழாவில் இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது, துக்ளக் இதழின் சிறப்பு மலரை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட, ரஜினிகாந்த் அதை  பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், மக்களுக்கு  சேவை செய்வது என்பது தந்தைக்குரிய பதவி. அந்த மாபெரும் சேவையை   சோவை தொடர்ந்து துக்ளக் இதழை சிறப்பாக கொண்டு செல்கிறார் குருமூர்த்தி. சோ ஒரு மிகச்சிறந்த அறிவாளி. அவர் அறிவாளி என்பதை நிரூபிக்க தேர்ந்தெடுத்த துறை பத்திரிக்கை துறை. அதில் அவர் எடுத்த ஆயுதம் துக்ளக். இந்த துக்ளக் இதழை, சோ ராமசாமியையும், துக்ளக்கையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்களில் இருவருக்கு முக்கிய பங்கு உண்டு என்றார், மேலும் கூறிய அவர்  ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றொருவர் பக்தவத்சலம். முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்பார்கள். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள் என்றார். மேலும் கூறிய அவர், தற்போதைய சூழலில் காலம், அரசியல், சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது. துக்ளக் சோவிற்கு பிறகு, இந்த துக்ளக் பத்திரிகை நடத்தப்படும் என இங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை. சோ மாதிரியான பத்திரிக்கையாளர் தான் தற்போது மிக அவசியம். பால் போன்ற உண்மை செய்தியில் தண்ணீரை கலக்க கூடாது. கவலைகளை நிரந்தரமாக்கிகொள்வதும், தற்காலிகமாக்கி கொள்வதும் நமது கையில்தான் உள்ளது. இவ்வாறு ரஜினிகாந்த் துக்ளக் இதழையும் அதன் முன்னால் தலைவர் சோ மற்றும் இன்னால் தலைவர் குருமூர்த்தி குறித்தும் பேசினார். இவரது கருத்து தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc