சரியான ஆளுமைக்கு தமிழக அரசியலில் இன்னும் வெற்றிடம் இருக்கிறது! - ரஜினிகாந்த அதிரடி!

நடிகர் ரஜினிகாந்த் இன்று கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில்

By manikandan | Published: Nov 08, 2019 01:37 PM

நடிகர் ரஜினிகாந்த் இன்று கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது ,’ திருவள்ளுவருக்கு காவி பூசுவது போல எனக்கும் சிலர் காவி வண்ணம் பூசப்பார்க்கிறார்கள். நானும் திருவள்ளுவரும் காவி சாயத்திற்குள் சிக்கமாட்டோம். திருவள்ளுவருக்கு காவி பூசுவது அவர்களது தனிப்பட்ட விருப்பம் . ' என தன் மீது கூறப்பட்டுவரும் அரசியல் சர்ச்சைகளுக்கு பதிலளித்தார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தன் வீட்டிற்கு வந்து அங்கும் பத்திரிக்கையாளர்களை சநதித்தார். அப்போதும் ' என் மீது பாஜக சாயம் பூச ஊடகங்கள் முயற்சி செய்கின்றன. நான் வெளிப்படையாக தான் பேசிவருகின்றேன். அரசியல் கட்சி தொடங்கும் வரை நான் திரைப்படங்களில் நடிப்பேன். தமிழக அரசியலில் இன்னும் சரியான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது உண்மைதான். ' என தெரிவித்தார். மேலும், ' அயோத்தி வழக்கில் எந்த எந்த தீர்ப்பு வந்தாலும் மக்கள் அமைதி காக்கவேண்டும். எனவும் கூறினார்.
Step2: Place in ads Display sections

unicc