ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும் -திருமாவளவன்

Rajini should express regret - Thirumavalavan

  • ரஜினி பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 
  • இதற்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்று சொல்வார்கள். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்வார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த்  துக்ளக்  விழாவில் பேசினார்.மேலும் பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது, செருப்பு மாலையும்  அணியப்பட்டது என்று தெரிவித்தார்.இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  கூறுகையில்,  சங் பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும் .சமூக நீதி கோணத்தில் பெரியாரை பார்த்தால் அவரது போராட்டங்களை ரஜினி புரிந்துக்கொள்ள முடியும். பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளார்.

  • Talking about Rajini Periyar caused controversy.
  • Thirumavalavan has said that Rajini should regret this.
If you have a mural, they will say DMKARAN. Actor Rajinikanth spoke at the Tughlaq function. In this case, the leader of the Liberation Panthers Party, Thol.Thirumavalavan, said that Rajini should not fall prey to the conspiracy of the Sangh Parivar. Rajini has expressed regret for slandering Periyar.