ரஜினியும், கமலும் அரசியலில் ஒன்றுகூடி பயணிக்கப் போகிறார்களா?மலேசியாவில் ஜன.6-ம் தேதி ரஜினி – கமல் சந்திப்பு…

ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாகத் தொடங்கியுள்ள நிலையில், மலேசியாவில் வரும் 6-ம் தேதி ரஜினிகாந்த் – கமல்ஹாசன் சந்திப்பு நடக்க உள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழா மலேசியாவில் வரும் 6-ம் தேதி பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இதில் ரஜினி, கமல் இருவரும் பங்கேற்கின்றனர். ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பிறகு, முதல் முறையாக இருவரும் சந்தித்துப் பேச உள்ளனர். இதற்காக, ‘விஸ்வரூபம் 2’ படப் பணிகளுக்காக அமெரிக்காவில் இருக்கும் கமல், அங்கிருந்து நேரடியாக மலேசியா வருகிறார். கலை நிகழ்ச்சி முடிந்த பிறகு, அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார்.
தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் போட்டிக் கதாநாயகர்களாக விளங்கிய ரஜினியும், கமலும் அரசியலில் ஒன்றுகூடி பயணிக்கப் போகிறார்களா? தனித்தனி வழியில் பயணம் அமையப் போகிறதா என்பது மலேசிய சந்திப்பில் தெரியவரும்.
source: dinasuvadu.com

Leave a Comment