காட்டுக்கு சென்ற ரஜினி – வெளியான டீசர்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பியர் கிரில்ஸ். உலகளவில் பிரபலங்களை காட்டுக்கு அழைத்துச் சென்று சாகசங்களை நிகழ்த்தும், Into The Wild எனும் புதிய நிகழ்ச்சியை தற்போது நடத்தி வருகிறார். இந்திய பிரதமர் மோடியை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற Into The Wild நிகழ்ச்சி வரும் மார்ச் 23ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதுப்பட டீசர் போல, அட்டகாசமாக, Into The Wild டீசரை பியர் கிரில்ஸ் மற்றும் அவரது குழுவினர் உருவாக்கி உள்ளனர். தற்போது வெளியாகியுள்ள அந்த நிகழ்ச்சி குறித்த டீசரை பார்த்த ரஜினி ரசிகர்கள், ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

அந்த டீசரில் டெர்ட் பைக்கில், ஹெல்மட் மற்றும் கூலர்ஸ் மாட்டியபடி, ரஜினிகாந்த், பறக்கும் காட்சிகள், டீசரில் நெருப்பாக தெறிக்கிறது என்றும் கூஸ்பம்ப்ஸ் காட்சிகளாக நிகழ்ச்சி முழுவதும் இருக்கப் போகிறது என்றும், ரசிகர்கள் ட்விட்டரில் கமெண்ட்டுகள் மற்றும் மீம்களை போட்டு வருகின்றனர். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி, உள்ளிட்ட பலருடன் இது போன்ற சாகச நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் கலந்து கொண்டுள்ளார். ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பங்கேற்றுள்ள இந்த ஒரு நிகழ்ச்சி, தனக்கு ரொம்ப ஸ்பெஷல் என பியர் கிரில்ஸ் குறிப்பிட்டதை ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்