#முக்கிய முடிவு எடுப்பா??: இந்தியா-சீனா கூட்டுஅறிக்கை!

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், பதற்றத்தை தணிப்பது தொடர்பாக, இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய -சீன ராணுவ கமாண்டர் அளவிலான, 6ஆம் சுற்று பேச்சுகளின் முடிவில், இருதரப்பும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வாறு இருநாடுகளும் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது: இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே, தகவல் தொடர்புகளை வலுப்படுத்தவும், தவறான புரிதல்கள் மற்றும் முன் முடிவுகளை தவிர்க்கவும், இரு நாடுகளின் தலைவர்களும் எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்தை, ஆர்வத்துடன் செயல் படுத்துவதாகவும்  இரு படைகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எல்லையில், அமைதி திரும்பவும், களத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு முடிவு கட்டவும், தற்போதைய நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கையில் இறங்குவதை தவிர்க்கவும், இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளது. அதிகாரிகள் மட்டத்திலான, ஏழாம் சுற்று பேச்சை விரைவில் நடத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாக அந்த கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

author avatar
kavitha