‘வலிமை’ படத்துடன் மோதும் ‘அண்ணாத்த’ ! சபாஷ் சரியான போட்டி !

அஜித் நடித்த வலிமை படத்துடன் மோதுகிறது ரஜியின் அண்ணாத்த படம். 

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் “அண்ணாத்த”. இந்த படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். 

கொரோனா வைரஸ் காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “அண்ணாத்த” படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதே நாளில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிய “வலிமை” படமும் திரைக்கு வருதாக அறிவித்திருந்தனர். 

author avatar
Vidhusan