ரஜினியும் விஜயும் நேருக்கு நேர் மோதுறாங்களாமே!

நடிகர் விஜய் மற்றும் ரஜினி பிரபலமான தமிழ் நடிகர்கள். இந்நிலையில் ரஜினி புகழின்

By Fahad | Published: Mar 29 2020 02:42 AM

நடிகர் விஜய் மற்றும் ரஜினி பிரபலமான தமிழ் நடிகர்கள். இந்நிலையில் ரஜினி புகழின் உச்சத்தை அடைந்திருந்தாலும் அதே உச்சத்தை விஜயும் கிட்டத்தட்ட தொட்டுவிட்டார் என்றே சொல்லலாம். நடிகர் விஜய் தனக்கென தனிரசிகர் பட்டாளத்தையே  கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் விஜய் நடித்து வரும் பிகில் படத்தை அடுத்து மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். அதே சமயம் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி தர்பார் படத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு ஒரேடியாக வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.