ராஜஸ்தானில் உள்ளாட்சி தேர்தலில் பாஜகாவை பின்னுக்கு தள்ளிய காங்கிரஸ்..!

ராஜஸ்தானில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது அதற்க்கான வாக்கெடுப்பு

By Fahad | Published: Mar 28 2020 12:07 PM

ராஜஸ்தானில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது அதற்க்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.அதில் காங்கிரஸ் 961 இடங்களையும் ,பாஜக 737 இடங்களையும் 386 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். அங்குள்ள மொத்தம் வார்டுகளில் எண்ணிக்கை 2,105 ஆகும். பாஜகவும் காங்கிரசும் ராஜஸ்தானில் தலா 21 நகராட்சி அமைப்புகளை கைப்பற்றியுள்ளன, மீதமுள்ள 7யை  மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சை வெற்றி பெற்றுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல்  நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ராஜஸ்தான்  மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.