ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்!

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி எனும் மாவட்டத்தில் ஒரு  5 வயது சிறுவன் தன் வீட்டு தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு சரிவர பராமரிக்கப்படாமல் ஒரு ஆழ்துளை கிணறு இருந்துள்ளது. அதில் அச்சிறுவன் தவறி விழுந்துவிட்டான்.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனே வந்துவிட்டனர். பின்னர், அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த மீட்புக்குழுவினர் சிறுவனை காப்பாற்றும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த மீட்புக்குழுவை ஆட்சியர் சுரேந்திர குமார் கண்காணித்து வந்தார். 15 அடி ஆழத்தில் சிக்கிய அச்சிறுவனுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கொடுக்கப்பட்டு அச்சிறுவனை கண்காணித்து வந்தனர். நேற்று அச்சிறுவனை மீட்பு படையினர் காப்பாற்றினார். காப்பாற்றி அங்கு தயாராக இருந்த மருத்துவ குழு சிகிச்சை அளித்து வந்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.