உயர்த்தப்பட்ட கலால் வரி ! பெட்ரோல் ,டீசல் விலை உயர வாய்ப்பு

கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை நிர்ணயித்து  வந்தது.

இந்நிலையில் தான் தற்போது கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.பேரல் ஒன்றின் விலை 36 டாலராக குறைக்கப்பட்டது.இதன் விளைவாக பெட்ரோல் ,டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.எதிர்க்கட்சிகளும் பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி வருகின்றன.ஆனால் மத்திய அரசு விலையை பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை குறைக்காமல் கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோல் ,டீசல் விலை உயர வாய்ப்பு உள்ளது.