தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குமரிக்கடல்

By venu | Published: Nov 30, 2019 08:04 PM

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக   தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை, கலசப்பாக்கம், நாயுடுமங்கலம், கீழ்பெண்ணாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல  மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்த கனமழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது
Step2: Place in ads Display sections

unicc