தண்ணீர்....தண்ணீர் தலைநகரின் தாகம் தீர்த்த மழை..! சென்னை -காஞ்சி -வேலூர் இடியுடன் கனமழை

தமிழகத்தில் கடுமையான வெயில் தாக்கத்தினால் நிலவிய தண்ணீர் பஞ்சம் மக்களை வாட்டி

By kavitha | Published: Jun 22, 2019 09:01 PM

தமிழகத்தில் கடுமையான வெயில் தாக்கத்தினால் நிலவிய தண்ணீர் பஞ்சம் மக்களை வாட்டி வதைத்து வந்தது.அணைகள் அனைத்தும் வற்றி வறண்டு விட்டது.குடிப்பதற்கு , குளிப்பதற்கு என்று தலைநகரம் தவித்து வந்த நிலையில் இன்று சென்னை மக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் விதமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் சுற்று வட்டாரப் பகுதிகளான  தாம்பரம் மற்றும்  குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம் பல்லாவரம், வடபழனி, அமைந்தகரை , மேடவாக்கம், ஊரப்பாக்கம்,மீனம்பாக்கம், வேளச்சேரி,  ஆகிய  இடங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை,வேலூரில் ஆகிய மாவட்டங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து  குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc