ரோஹித் சர்மாவை புகழ்ந்து கூறிய ரெய்னா.!

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை பற்றி சிறப்பாக புகழ்ந்து

By bala | Published: Jul 30, 2020 01:37 PM

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை பற்றி சிறப்பாக புகழ்ந்து கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் அடுத்த தோணி யார் என்ற கேள்விக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார், அதில் அவர் கூறியது அடுத்த தோனி யார் என்று என்னிடம் கேட்டால்  கண்டிப்பாக நான் ரோஹித் சர்மாவை கூறுவேன். சமீபகாலமாக அவருடைய பேட்டிங் மிகவும் சிறப்பாக உள்ளது.

 ரோஹித் சர்மா கேப்டன்ஷி செய்யும் பொழுது அவருடைய கேப்டன்ஷி தோனி போலவே இருக்கும், அணியில் உள்ள வீரர்களுக்கு பொறுமையாக தோனியை போல் கருதுகளை கூறி வழிநடத்துவார், என்றும் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். அணியில் உள்ள அணைத்து வீரர்களையும் சுலபமாக புரிந்து கொள்வார்.

மேலும் தோனியை காட்டிலும் ஐபிஎல் போட்டிகளில் அதிகம் கோப்பையை பெற்றுக்கொடுத்தவர் ரோஹித் சர்மா தான், மேலும் நான் அவருடன் மைதானத்தில் விளையாடியபோது எனக்கு தொடர்ந்து அவர் தன்னம்பிக்கை அளிப்பார். மேலும் அவர் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷி செய்யும் பொழுது எதை செய்தால் வெற்றிபெறலாம் என்று அவர் பொறுமையாக யோசித்து அனைத்து முடிவுகளையும் எடுப்பார் என்றும் கூறியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc