கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா 52 இலட்சம் நிதியுதவி… அற்புதமான ஐம்பது என மோடி பாராட்டு…

கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா 52 இலட்சம் நிதியுதவி… அற்புதமான ஐம்பது என மோடி பாராட்டு…

 உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதேபோல்  இந்தியாவிலும் இந்த கொடிய வைரஸ் பாதிப்பை ஏற்படுத்த துவங்கியுள்ளது. இதனால், இந்திய்ய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிரது. இதில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால் இந்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் மூலம் அறிவித்தது. இந்நிலையில் கொரோனோஅவுக்கு எதிரான போரில் இந்திய அரசிற்கு உதவுங்கள் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். இதன் காரணமாக, இந்தைய விளையாட்டு வீரர்கள் கொரோனாவுக்கு எதிராக போரிட

  • கிரிக்கெட் வீரர் சச்சின் (50 லட்சம்)
  • பாட்மின்டன் வீராங்கனை சிந்து(ரூ.10 லட்சம்)
  • பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி (ரூ.5 லட்சம் மதிப்புள்ள அரிசி)
  • முன்னாள் வீரர்கள் இர்பான், யுசுப் பதான்( 4 ஆயிரம் மாஸ்க்)
  • மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா( 6 மாத சம்பளம்)
  • தடகள வீராங்கனை ஹிமா தாஸ்(ஒரு மாத சம்பளம்)
  • உள்ளிட்ட இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் நிவாரண நிதி வழங்கினர்.

தற்போது இந்த பட்டியலில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் இணைந்துள்ளார். இது குறித்து அவர் சமுக வளைதளமான டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், கொரோனாவை தோற்கடிக்க நாம் உதவி செய்ய வேண்டிய நேரம் இது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு நிவாரண நிதியாக நான்  ரூ.52 லட்சம் வழங்குகிறேன். இதில், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.31 லட்சமும், உத்திர பிரதேச முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.21 லட்சம் வழங்க உள்ளேன். நீங்களும் தயவு செய்து உதவுங்கள். இவ்வாறு அந்த பதிவில் ரெய்னா தெரிவித்துள்ளார். இதற்கு பாராட்டு தெரிவித்து பாரத பிரதமர்  மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் அற்புதமான ஐம்பது என்று கொரோன தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி அளித்த சுரேஷ் ரெய்னாவை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube