மேற்கு மாவட்டங்களில் மழை தொடரும்.!

தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலுக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வட மேற்கு திசை நோக்கி நகரும் என்பதால் கர்நாடகத்தில் சில பகுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 12 மணி நேரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டியபகுதியில் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடஙக்ளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தென்மேற்கு பருவகாற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் அதிகபட்சமாக 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து புதுக்கோட்டையின் தலா பகுதிகளில் 4 செ.மீ  மழையும் பதிவாகியுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.