தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை நீடிக்கும்-சென்னை வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 அல்லது 3 தினங்களுக்கு மழை தொடர வாய்ப்பு

By venu | Published: Sep 19, 2019 01:56 PM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 அல்லது 3 தினங்களுக்கு மழை தொடர வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று இது குறித்து வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை நீடிக்கும்.திருவள்ளூர், தேனி, திருச்சி, வேலூர், கிருஷ்ணகிரி திண்டுக்கல் தருமபுரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது .சென்னையை பொறுத்தவரை செப்டம்பர் மாதத்தில் இயல்பை விட 29% அதிக மழை பெய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.  
Step2: Place in ads Display sections

unicc