இதை ஏப்ரல் மாதத்தில் தீர்ப்போம்-கிண்டலடித்த நியூசிலாந்து வீரருக்கு ராகுல் பதிலடி

மைதானத்தில் ராகுல் மற்றும் ஜேம்ஸ் இருவரும் மோதிய நிலையில் தற்போது சமூக

By venu | Published: Feb 13, 2020 01:38 PM

மைதானத்தில் ராகுல் மற்றும் ஜேம்ஸ் இருவரும் மோதிய நிலையில் தற்போது சமூக வலைத்தளமான ட்விட்டரில் மீண்டும் மோதியுள்ளனர்.  இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் நடைபெற்ற தொடரில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் லோகேஷ் ராகுல் மற்றும் நியூசிலாந்து அணியின் ஜேம்ஸ் நீஷமிற்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.எனவே மைதானத்தில் சலசலப்பு நடைபெற்ற நிலையில் ,தற்போது சமூக வலைத்தளமான ட்விட்டரில் இருவருக்கும் இடையே வார்த்தை போர் நடைபெற்று உள்ளது.முதலில் நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ,இருவரும் மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடும் புகைப்படத்தை பதிவிட்டு, அதில் Paper, scissors, rock? என்று கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய அணி வீரர் லோகேஷ் ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில்,இதை ஏப்ரல் மாதத்தில் தீர்ப்போம். அப்போது உங்களை பார்த்து கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.இருவரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாட உள்ளனர்.அந்த அணிக்கு ராகுல் தான் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc