ராகுல் காந்தி தமிழக வருகை!! ட்விட்டரில் இந்திய  அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகும் #GoBackRahul!!  

  • நாகர்கோவிலில் இன்று ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார். 
  • ராகுல் காந்தி தமிழக வருகையையொட்டி சமூக வலைதளமான ட்விட்டரில்  #GoBackRahul  என்ற ஹேஷ் டாக் இந்திய  அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும்.

திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, இந்திய கம்யூனிஸ்ட்  – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சிக்கு கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு இல்லை என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். நாகர்கோவிலில் இன்று ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார். ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for #GoBackRahul

இதனால் ராகுல் காந்தி தமிழக வருகையையொட்டி சமூக வலைதளமான ட்விட்டரில்  #GoBackRahul  என்ற ஹேஷ் டாக் இந்திய  அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.அதேபோல் #GoBackPappu என்ற ஹேஷ் டாக் இந்திய  அளவில்   ட்ரெண்டாகி வருகிறது.மேலும் ராகுலுக்கு ஆதரவாக #VanakkamRahulGandhi என்ற ஹேஷ் டாக் இந்திய  அளவில்  ட்ரெண்டாகி வருகிறது.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தமிழக வருகையையொட்டி என்ற ஹேஷ் டாக்  உலக அளவில் முதலிடத்தில் நான்கு முறைக்கு மேல்  ட்ரெண்டாகியது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment