ராகுல் காந்தியின் பேச்சை சிறப்பாக மொழி பெயர்த்த பள்ளி மாணவி! வைரலாகும் வீடியோ!

ராகுல் காந்தியின் பேச்சை சிறப்பாக மொழி பெயர்த்த பள்ளி மாணவி! வைரலாகும் வீடியோ!

கேரள வயநாடு எம்.பியும் காங்கிரஸ் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி, வயநாட்டில் ஒரு பள்ளியில் நடைபெற்ற அறிவியல் ஆய்வக திறப்பு விழாவில் கலந்துகொண்டார். பின்னர் தனது மேடை பேச்சை தொடங்கினார். பொதுவாக அம்மாநிலத்தில் ராகுல் காந்தி பேசுகையில் அம்மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர் கே.சி.வேணுகோபால் தான் மொழிபெயர்ப்பார். ஆனால், இந்த சமயம் ராகுல் காந்தி பேசுகையில் பள்ளி மாணவிகளுள் ஒருவர் வந்து தன்னுடைய பேச்சை மொழிபெயர்க்க வருமாறு வேண்டுகோள் வைத்தார். இதில் தன்னார்வத்துடன் 11 ஆம் வகுப்பு மாணவி பாத்திமா என்பவர் முன்வந்தார். அவர் ராகுல் காந்தி பேச்சை சிறப்பாக மொழிபெயர்த்தார். அவர் மொழிபெயர்த்து பேசிய வீடியோ தொகுப்பை காங்கிரஸ் கட்சி தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Latest Posts

1997-ஆம் ஆண்டு விஐபி அறையில் வைத்து பாலியல் ரீதியாக டிரம்ப் துன்புறுத்தினார் - முன்னாள் மாடல் புகார்
புல்வாமா தாக்குதல் போல் மற்றோரு தாக்குதல் முறியடிப்பு.! ஜம்முவில் 52 கிலோ வெடிபொருட்கள் கண்டெடுப்பு.!
குறைவான ஊதியத்தை எதிர்த்து நொய்டாவில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றார்..!
தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து.! அரசாணையை வெளியிட்டார் தலைமை செயலாளர்.!
இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீக்னஸ்....சஞ்சய் பங்கர்...!
விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக புகழேந்தி நியமனம் - துரைமுருகன் அறிவிப்பு
சிகிச்சை பெற்று பெண்ணிடம் தங்க தாலி திருட்டு - ஜிப்மர் மருத்துவமனை!
ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி சிறிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்-ரஷ்ய சுகாதார அமைச்சர்..!
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை