தமிழகம் வந்தடைந்தார் ராகுல் காந்தி !

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்துள்ளார். தமிழகத்தில் 

By venu | Published: Apr 12, 2019 12:23 PM

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்துள்ளார். தமிழகத்தில்  மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தலை யொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர். அந்த வகையில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ், மதிமுக , விசிக, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி , ஐஜேகே  ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 12 ஆம் தேதி) காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்துள்ளார்.தேனீ, கிருஷ்ணகிரி,திருப்பரங்குன்றம்  சேலம் ஆகிய இடங்களில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.  
Step2: Place in ads Display sections

unicc