உத்தரபிரதேசம் சென்ற ராகுல் ,பிரியங்கா தடுத்து நிறுத்தம்

உத்தரபிரதேசம் சென்ற ராகுல் ,பிரியங்கா தடுத்து நிறுத்தம்

  • குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உத்திர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில்  போராட்டங்கள் நடைபெற்றது.
  • துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற ராகுல், பிரியங்கா காந்தியை தடுத்து நிறுத்தியது போலீஸ்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இதில் உத்திர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி கலவரங்களாகி பொது சொத்துக்கள் சேதம், உயிரிழப்பு என கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த கலவரம் காரணமாக 24 மணிநேரமும் உத்திர பிரதேசத்தில்  காவல்துறையினருக்கு வீட்டிற்கு செல்ல அனுமதியில்லை.

உத்திர பிரதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தில் தற்போது வரை 15-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் சுமார் 705 பேர்  கைது செய்யப்பட்டனர். 125 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் மீரட் நகரில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற ராகுல், பிரியங்கா காந்தியை தடுத்து நிறுத்தியது போலீஸ்.காரில் சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை அனுமதிக்க மறுப்பு தெரிவித்து விட்டனர்.

 

 

Join our channel google news Youtube