டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்ட ராகுல் காந்தி

சமீபத்தில் மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து

By venu | Published: Aug 24, 2019 02:44 PM

சமீபத்தில் மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று  அறிவித்தது. காஷ்மீர் விவகாரத்தில் முதலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீரின் முக்கிய தலைவர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  ஆனால்  காஷ்மீரில் முக்கிய தலைவர்கள் கைது  செய்யப்பட்ட விவகாரம்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.காஷ்மீருக்கு நிலைமையை அறியச் சென்ற பல தலைவர்கள் ஸ்ரீநகரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தநிலையில்தான்  காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து  வருவதாக காங்கிரஸ் முன்னாள்  தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.இதற்கு பதிலளிக்கும் விதமாக,காஷ்மீர்  ஆளுநர் சத்தியபால் மாலிக் நிலையை நேரில் வந்து பார்வையிடுமாறு அழைப்பு விடுத்தார். இன்று  ஜம்மு காஷ்மீர் மாநில நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக  ராகுல் காந்தி மற்றும்  எதிர்க்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகர் புறப்பட்டு சென்றனர்.  
Step2: Place in ads Display sections

unicc