50 ஆண்டுகால இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக ராகுல் டிராவிட் தேர்வு.!

ராகுல் டிராவிட் 50 ஆண்டுகால இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த

By bala | Published: Jun 25, 2020 03:07 PM

ராகுல் டிராவிட் 50 ஆண்டுகால இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட். ராகுல் டிராவிட் ஆடிய காலத்தில் அவரது விக்கெட்டை வீழ்த்திவிட்டால் போதும் என்று எதிரணி பவுலர்களையும் கேப்டன்களையும் ஏங்க வைத்தவர் என்றே கூறலாம், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்திருக்கிறார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் யார் என்பதைக் கண்டறியும் வகையில் விஸ்டன் இந்தியா நிறுவனம் முகநூலில் ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. மேலும் இந்த வாக்கெடுப்பில் சச்சின் தெண்டுல்கர், மற்றும் சுனில் கவாஸ்கர், விராட் கோலி உள்பட 16 பேட்ஸ்மேன்களின் பெயர் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இதில் சச்சினை பின்னுக்கு தள்ளி 52 சதவீத வாக்குகள் பெற்று ராகுல் டிராவிட் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப் ப்பட்டார். மேலும் இந்த வாக்கெடுப்பில் சச்சின் தெண்டுல்கர் இரண்டாம் இடத்தில இருப்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc