அரை சதம் விளாசிய ரஹானே, ஜடேஜா..! 297 ரன்களில் ஆல்அவுட்..!

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. நேற்று

By murugan | Published: Aug 24, 2019 07:45 AM

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் முதலாவது டெஸ்ட் போட்டி  ஆண்டிகுவாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. Image
முதலில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் ,மயங்க் அகர்வால் இருவரும்  களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே மயங்க் அகர்வால் 5 , புஜாரா 2 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய கோலி 9 ரன்னுடன் வெளியேற இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.
பின்னர் ராகுல் , ரஹானே இருவரும் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். சிறப்பாக விளையாடிய கே. எல் ராகுல் அரைசதம் அடிக்காமல் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் ரஹானே நிதானமாக விளையாடி அரைசதம் விளாசி  81 ரன்கள் குவித்தார்.
Image
 இதை தொடர்ந்து முதல் நாள் ஆட்ட  முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழந்து 203 ரன்கள் எடுத்து இருந்தது. பின்னர் நேற்று இரண்டாம் நாள் தொடங்கிய இந்திய அணியில்  ரிஷாப் பண்ட் , ஜடேஜா இருவரும் நிதானமாக விளையாடிய ரன்களை சேர்த்தனர்.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா 58 ரன்கள் குவித்தார்.
இறுதியாக இந்திய அணி 96.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 297 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெமர் ரோச் 4 விக்கெட்டை பறித்தார்.
 
Step2: Place in ads Display sections

unicc