ஓடிடியில் வெளியாகும் ராகவா லாரன்ஸின் 'லட்சுமிபாம்'.!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள லட்சுமி படத்தை

By ragi | Published: Jun 30, 2020 10:56 AM

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள லட்சுமி படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி 2 ல் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து, தற்போது காஞ்சனா படத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் ராகவா லாரன்ஸ் . அதில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்கின்றனர்.மேலும் இவர்  இந்த படம் மே 22 ல் வெளிவரும் என்று கூறப்பட்டது. ஆனால் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு ரிலீஸை தள்ளி வைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக பல படங்களை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் சமீபத்தில்  ரூ. 50 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தை OTT இல் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. தற்போது அதனை அக்ஷய் குமார் அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த படம் ஓடிடியில் ஜூலை அல்லது அக்டோபர் மாதங்களுக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

   
Step2: Place in ads Display sections

unicc