பிரான்சிலிருந்து இந்திய விமானப் படைக்கு புதிதாக களமிறங்கிய ரஃபேல்!

பஜக அரசானது 2014ஆம் ஆண்டு  36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கபோவதாக அறிவித்திருந்தது. இந்த விமானத்தின் உதிரிபாகங்களை தயாரிப்பதற்காக ஏற்கனவே போர் விமானங்களை தயாரித்து வரும் ஹிந்துஸ்தான் நிறுவனத்திடம் கொடுக்காமல், புதியதாக தொடங்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இந்த ரக விமானங்களின் உதிரி பாகங்களை தயாரிக்கும் பணி கொடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் மிகுந்த சர்ச்சையை கிளப்பியது.

தற்போது முதல் ரஃபேல் விமானம் பிரான்ஸ் நாட்டிலுள்ள டசால்ட் நிறுவனத்திடமிருந்து செப்டம்பர் 20ம் தேதி ( இன்று ) கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல் ரபேல் விமானத்தை இந்திய கொண்டுவருவதற்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் விமானப்படை அதிகாரிகள் பிரான்ஸ்  சென்றுள்ளனர்.

இதற்கடுத்து, நான்கு போர் விமானங்கள் 2020 மே மாதமும், மீதமுள்ள விமானங்கள் 2022க்குள் இந்தியா வந்தடையும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.