ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை : தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை : தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

  • ராதாபுரம் தொகுதியில்  கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்தது.
  • ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை கோரிய வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

அதிமுக வேட்பாளர் இன்பதுரை 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற  தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவரது  வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்,கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவுக்கு எதிராக அதிமுகவின் இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வருகின்ற 11-ஆம் தேதி வரை வெளியிட தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. டிசம்பர் 11ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தது.ஆனால் தற்போது மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை ஒத்திவைக்குமாறு, இன்பதுரை தரப்பு வழக்கறிஞர்  முறையீடு செய்ததை தொடர்ந்து ,அதனை ஏற்று நீதிபதிகள் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஜனவரிக்கு ஒத்திவைத்தனர்.

Join our channel google news Youtube