சோதனையில் சிக்கிய பொன்.ராதாகிருஷ்ண! 10000 -க்கும் மேற்பட்ட பொன்.ராதாகிருஷ்ணன் படம் பொறித்த அட்டைகள் பறிமுதல்!

சோதனையில் சிக்கிய பொன்.ராதாகிருஷ்ண! 10000 -க்கும் மேற்பட்ட பொன்.ராதாகிருஷ்ணன் படம் பொறித்த அட்டைகள் பறிமுதல்!

நாகர்கோவில் அருகே வாகனச் சோதனையில் தாமரை சின்னம்  மற்றும் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் புகைப்படம் இடம் பெற்றிருந்த 10000-க்கும்  மேற்பட்ட கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி  நடைபெற உள்ளது.தேர்தல் பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்  திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். இதில்  ரூ. 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரிவித்தனர்.

அதேபோல்  தனியார் சிமெண்ட் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.அந்த சோதனையில் கட்டு கட்டாக  மூட்டைகளில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.சிமெண்ட் குடோனில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ. 11.53 கோடி என தகவல் தெரிவித்தது.

துரைமுருகன் வீட்டில் சோதனை செய்தது பற்றி தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளித்தது வருமான வரித்துறை.தேர்தலில் சமயத்தில் முக்கிய பிரமுகர்களின் வீட்டில் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல் பறக்கும் படையினரும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் சோதனை மேற்கொண்டு ஆவணமில்லாத  பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்து வருகின்றது.

கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.இந்நிலையில் நாகர்கோவிலில்  பறக்கும்படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.அப்போது அங்கு வந்த கார் ஒன்றில்  நிறைய பெட்டிகள் இருந்தது.அந்த பெட்டியை அதிகாரிகள் பிரித்து பார்த்ததில் பாஜக சின்னமான தாமரை மற்றும் அந்த தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அதில் சுமார் 10000 மேற்பட்ட கார்டுகள்  இருந்தது.

அட்டை

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *