செய்தியாளர் கேட்ட கேள்வியால் கடுப்பான கிங்கோலி.. !

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் நியூஸிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதற்கு முன் விளையாடிய ஒருநாள் போட்டி தொடரையும்  நியூசிலாந்து அணி கைப்பற்றியது .

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மொத்தமாக 38 ரன்கள் மட்டுமேஎடுத்து இருந்தார். இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து பேட்டிங் செய்தது.

அப்போது கேப்டன் வில்லியம்சன் 3 ரன்கள் எடுத்த போது பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அந்நிலையில் இந்திய கேப்டன் கோலி கடுமையாக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். கோலியும் ,  வில்லியம்சனும் நண்பர்கள் என்றால்  இப்படிப்பட்ட ஆக்ரோஷம் தேவையான என பல முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் டெஸ்ட் தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது , ஒரு செய்தியாளர் மைதானத்தில் நீங்கள் வெளிப்படுத்திய ஒரு ஆக்ரோஷம் சரியானதா..? நீங்கள் நடந்துகொண்ட விதம் சரியானது..? என பல கேள்விகள் எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கோலி மைதானத்தில் என்ன நடந்தது என்று நீங்கள் தெரிந்து கொண்டு கேள்வி கேட்க வேண்டும். என்ன நடந்தது என்று தெரியாமல் கேள்வி கேட்கக்கூடாது. அதையும் மீறி சர்ச்சையைக் கிளப்பி விரும்பினால் இது சரியான இடமும் , நேரமும் அல்ல. எனக் கூறி கோபத்துடன் முடித்துக் கொண்டார்.

author avatar
murugan